/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெடிலம் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு
/
கெடிலம் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு
ADDED : டிச 14, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தொடர் மழையால், கடலுார் கெடிலம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மையனுாரில் கெடிலம் ஆறு உருவாகிறது. இது மலட்டாற்றுடன் சேர்ந்து கடலுார் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
ஆறு மற்றும் வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
இதனால், கெடிலம் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம், கடலுார் கம்மியம்பேட்டை தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

