ADDED : ஏப் 04, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலடியில், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வேல்முருகன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் திறந்து வைத்து, பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர் வழங்கினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் வேல்முருகன், தேவபிரசாத், பட்டுகுமார், ஒன்றிய துணை செயலாளர் தினேஷ்குமார், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ஜெமினி ரவி, ஒன்றிய நிர்வாகிகள் சுப்ரமணியன், குபேரதேவதாஸ், பாசறை செயலாளர் விக்னேஷ் பங்கேற்றனர்.

