ADDED : ஏப் 07, 2025 04:57 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அகரம் பகுதியில் அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், செல்வி ராமஜெயம், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர்.
பாண்டியன் எம்.எல்.ஏ., நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் வழங்கினார்.
விழாவில், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், துணை செயலாளர் இக்பால், நிர்வாகிகள் கார்த்தி, ரவி, கருணாகரன், சக்கரவர்த்தி, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

