/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழணையில் தண்ணீர் திறப்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்
/
கீழணையில் தண்ணீர் திறப்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்
கீழணையில் தண்ணீர் திறப்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்
கீழணையில் தண்ணீர் திறப்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்
ADDED : அக் 25, 2025 02:46 AM
காட்டுமன்னார்க்குடி: அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் இரண்டு லட்சம் கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டெல்டா பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கீழணைக்கு 60 ஆயிரம் கன அடி அளவில் இருந்த தண்ணீர் வரத்து, நேற்று இரண்டு லட்சம் கன அடி அளவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கொள்ளிடம் ஆற்றில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையிலிருந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீரும், கல்லணையில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
டெல்டா பகுதியில் பெய்து வரும் மழை தண்ணீரும் சேர்ந்தள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு இரண்டு லட்சம் கன அடி அளவில் தண்ணீர் வரத்தாக உள்ளது.
டெல்டாவில் பரவலாக மழை பெய்து ஒரு நிலையில் கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழணைக்கு வரும் உபரி நீர் 2 லட்சம் கன அடி தண்ணீரை அப்படியே கீழ் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

