/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
/
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
ADDED : அக் 23, 2025 12:58 AM
சிதம்பரம்: தொடர் மழை காரணமாக, கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் கொள்ளிடம் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்து வரும் நிலையில், மேட்டூரில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை தொடர்து மேலணை வழியாக கல்லணைக்கு வரும் மழை நீர், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதனை தொடர்து, நேற்று காலை முதலே கிழணைக்குதண்ணீர் வந்த கொண்டிருக்கும் நிலையில், நேற்று காலை கீழணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததது.
அதனை தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில், மதியம் 10 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டது.
நேற்று நள்ளிரவு நேரத்தில், மேலிருந்து வரும் 35 ஆயிரம் கன அடி தண்ணீரும் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கீழணையில், வடக்கு பகுதியில் உள்ள 30 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம்ஆற்றில் திறப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.