நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா கல்வி மைய வெள்ளி விழாவையொட்டி, யோகரத்னம் லலித்குமார் நினைவு நன்கொடை சார்பில் ஒரு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
யோகா மைய இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். துணை வேந்தர் குழு உறுப்பினர் பேராசிரியர் அறிவுடை நம்பி பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசினார்.
கல்வி புல முதல்வர் அம்பேத்கர், உடற்கல்வி துறை தலைவர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர். லலித்குமார் பெற்றோர்கள், யோகபயிற்சியின் மூலம், தன் மகன் நடராஜன், குடியரசு தலைவரிடம் விருது பெறும் அளவிற்கு உயர்ந்தது குறித்து பேசினர். நிகழ்வில், சபாபதி, முபாரக்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியை சுசிலா நன்றி கூறினார்.