தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

 குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

 குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி


ADDED : ஜூன் 04, 2026 09:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: கீழ் புவனகிரியில் குடிநீர் தட்டுப்பாட்டினால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கீழ்புவனகிரியை சே ர்ந்த சின்னப்ப முதலித்தெரு, சவுராஷ்டிரா தெரு, புது தெரு, வங்காளதன் சந்து, குருசாமி தோப்பு உள்ளிட்ட சுற்று பகுதியில், 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு புவனகிரி பஸ் நிலையம் அருகில் மேல்நிலைத் தேக்க தொட்டி அமைத்து, போர்வெல் மூலம் தண்ணீர் தேக்கி, குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. வீட்டு இணைப்பு பெற்றவர்கள் இதற்கான கட்டணம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தி வருகின்றனர். தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக குடிநீர், சுகாதாரமற்ற முறையில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்திற்கு ஆயத்தமான நிலையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இது வரை எந்த முயற்சியும் எடுக்காததால் அப்பகுதியினர் குடிநீருக்கு அல்லாடி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us