ADDED : ஜூன் 04, 2026 09:51 AM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த தொரப்பு பெரிய தெருவைச் சேர்ந்த ராதா மகன் மலையப்பன் 36; கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.
மலையப்பன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி வந்தார். கடந்த மே , 24ம் தேதி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி தனலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் தட்டிக்கேட்டனர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட தில், மனமுடைந்த மலையப்பன், பூச்சி மருந்ததை மதுவில் கலந்து குடித்தார். உடன் அவரை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்கு கடலுார் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது குறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
