/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு சிறுபாக்கம் அருகே மறியல்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு சிறுபாக்கம் அருகே மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு சிறுபாக்கம் அருகே மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு சிறுபாக்கம் அருகே மறியல்
ADDED : ஆக 14, 2025 01:06 AM

சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் தினசரி குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறுபாக்கம் ஊராட்சியில் 10,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், குளத்து மேடு மற்றும் முதலியார் தெருவில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 7:00 மணிக்கு அதே பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால்7:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.