/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயம்
/
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயம்
ADDED : அக் 28, 2024 05:31 AM
கடலுார், : கடலுாரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது.
கடலுார் பாரதி சாலையில் இருந்து பழைய கலெக்டர் அலுவலகம் சாலை பிரியும் இடத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இங்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
மேலும், இதன் அருகில் உள்ள பள்ளத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க மெகா சைஸ் கல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

