/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு வீணாகிய குடிநீர்
/
பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு வீணாகிய குடிநீர்
ADDED : ஜூலை 15, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து, தண்ணீர் வீணாக வழிந்தோடியது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் மாவட்டம் முழுதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் புதுச்சத்திம் அடுத்த சேந்திரக்கிள்ளை வழியாக பூவாலை பகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் செல்கிறது.
இதற்கிடையே, சேந்திரக்கிள்ளை எல்லைக்கோவில் பின்புறத்தில், கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வழிந்தோடியது. இதனை அதிகாரிகள், பைப்லைனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

