/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு பாலத்தின் அடியில் உள்ள தடுப்புகட்டையால் தண்ணீர் தேக்கம்

ADDED : அக் 25, 2025 02:06 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் பழைய பாலத்தின் அடிப்பகுதியில் புதியதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் வழியாக மழை நீர் வழிதோடிவருகிறது.
நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கடந்த 1967 ம் ஆண்டு 16 கண்கள் கொண்ட உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டது.இதனால் தற்போது புதிய பாலம் கட்டப்பட் டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பழைய பாலத்தின் அடியில் மண் அரிப்பை தடுக்கவும், புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கவும், தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு,கருங்கற்கள் கொட்டப்பட்டது.
இதனால் தற்போது பெய்து வரும் மழையில் ஆற்றில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு,மழைநீர் தேங்கி,உபரிநீர் தடுப்பு கட்டைகள் வழியாக வழிந்தோடுகிறது.
இந்த தடுப்பு கட்டையின் உயரத்தினை அதிகரித்து கட்டியிருந்தால்,அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிலத்திடிநீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.