/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹயக்கிரீவர் கோவிலுக்கு வழி; எம்.பி.,யிடம் கோரிக்கை
/
ஹயக்கிரீவர் கோவிலுக்கு வழி; எம்.பி.,யிடம் கோரிக்கை
ஹயக்கிரீவர் கோவிலுக்கு வழி; எம்.பி.,யிடம் கோரிக்கை
ஹயக்கிரீவர் கோவிலுக்கு வழி; எம்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : ஜன 20, 2025 11:54 PM
கடலுார்; நாகப்பட்டினம் புறவழிச் சாலையில், திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலுக்கு செல்ல வழி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடலுார் எஸ்.பி., விஷ்ணு பிரசாத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் யுனிவர்சல் டவுன்ஷிப் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் குடியிருப்பு மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை அருகே யுனிவர்சல் டவுன்ஷிப் நகர் வழியில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி, ஹயக்கீரிவர் கோவில் உள்ளது. இங்கு திருமண நாட்களில் 200க்கு மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. மேலும், யுனிவர்சல் டவுன்ஷிப் நகர், சி.பி.எஸ்., கார்டன், புதுமனை நகர், எம்.புதுார் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதற்கு செல்லும் வழி 2 கி.மீ., சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்
பயிற்சி பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, நாகப்பட்டினம் புறவழிச் சாலையில் யுனிவர்சல் டவுன்ஷிப் நகர், புது மலை நகர் அருகே திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலுக்கு செல்லும் இடத்திற்கு வழி திறக்க வேண்டும். இதற்காக திருவந்திபுரம் ஊராட்சி கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விவசாய நிலங்களுக்கு செல்லவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

