/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாங்களும் செஞ்சோம்ல... தி.மு.க.,வுக்கு போட்டியாக சாதனைகளை வெளியிடும் அ.தி.மு.க., தொற்றியது திட்டக்குடியில் தேர்தல் பரபரப்பு

ADDED : ஆக 26, 2025 11:42 PM
தமிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026 மே 9ம் தேதியுடன் முடிகிறது.
இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சி தீவிரம் காட்டுவதுடன், கூட்டணி கட்சிகளையும் மாற்று கூட்டணிக்கு தாவ விடாமல் தங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தின் கடைகோடி தொகுதியான திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில் சில வாரங்களுக்கு முன், தி.மு.க., அமைச்சரும், தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான கணேசன் தொகுதிக்கு கரிசனம் காட்டி, பல வளர்ச்சிப் பணிகளை செய்து வருவதாகவும், அ.தி.மு.க., ஆட்சியில் அக்கட்சியின் மேற்குமாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழிதேவன் திட்டக்குடி தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை எனவும் பரபரப்பு தகவல் வெளியானது.
இதற்காக போட்டி போட்டுக்கொண்டு, அ.தி.மு.க., ஐ.டி., விங்., களமிறங்கி, அ.தி.மு.க., சார்பில் தொகுதிக்கு செய்த சாதனைகளான திட்டக்குடிக்கு அரசு கலைக் கல்லுாரி கொண்டு வந்தது, கீழ்ச்செருவாய், கூடலுார், செம்பேரி பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியது.
விருத்தாசலம் - ராமநத்தம் இடையே 49 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தியது என சாதனை பட்டியல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தி.மு.க.,வை அப்செட்டாக்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் துவங்க இன்னும் 6 மாதங்களுக்கு மேலாக உள்ள நிலையில் இப்போதே திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில் தேர்தல் 'ஸ்டண்ட்' துவங்கியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.