ADDED : டிச 17, 2025 06:12 AM
வி ருத்தாசலம் - திட்டக்குடி வழித்தடத்தில் பெண்ணாடம் வழியாக விருத்தாசலம், திட்டக்குடி பணிமனைகளில் இருந்து டவுன் பஸ், புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.
மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன் விருத்தாசலம் பணிமனை 1ல் இருந்து இரு தாழ்தள சொகுசு பஸ் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் இயக்கப்பட்டன.
இப்பகுதி பொது மக்கள் தாழ்தள சொகுசு பஸ்சை பயன்படுத்தி விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு சொகுசு பயணம் மேற்கொண்டனர்.
ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன் எவ்வித அறிவிப்புமின்றி இரு தாழ்தள சொகுசு பஸ்களும் நிறுத்தப்பட்டதால் இப்பகுதி பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுயதாவது;
'டிக்கெட்' கட்டணம் வசூல் குறைவாக வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்படும் என்பதால் ஒரு பஸ் விருத்தாசலம் - கடலுார் மார்க்கத்திலும், மற்றொரு தாழ்தள சொகுசு பஸ் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக வழங்கப்பட்ட இரு டவுன் பஸ்களில் ஒரு பஸ் விருத்தாசலம் பணிமனைக்கும், மற்றொரு பஸ் திட்டக்குடிக்கும் வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

