நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத் துவமனையில் கோரிக்கை அடங்கிய பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணிபுரிந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான நிலுவையில் உள்ள பணப்பயன் 3,000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசாணை 4 டி (2ல் குறைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் அரசாணை 354ல் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மூலம் மறுபகிர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் நோயாளிகள் பாதிக்காத வகையில், மருத்துவர்கள் இரண்டாவது நாளாக நேற்று கோரிக்கை அடங்கிய பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.