/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெசவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
நெசவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 03, 2025 10:55 PM
கடலுார்; கடலுார் மாவட்ட கைத்தறிநெசவு பாவுப்பட்டறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கடலுார் முதுநகரில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த, போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளர் தயாளன், துணைச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நாகேந்திரன், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணன், துணைத் தலைவர் ஆளவந்தார் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
இதில், கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் கைலி உள்ளிட்ட ரகங்களுக்கு வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரடியாக கூலி வழங்கும் முறை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
சங்க துணைத் தலைவர்கள் முருகவேல், ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் குமார், அரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

