/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம்
/
விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED : செப் 01, 2025 12:59 AM

மந்தாரக்குப்பம் : பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி, திருக்கல்யாணம் நடந்தது.
கோவிலில் 22ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண் டாடப்பட்டது. சுவாமிக்கு தினசரி பூஜை, தீபாராதனையும, நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
மணமகன் கோலத்தில் விநாயகரும், மணமகள் கோலத்தில் சிக்தி, புக்தி சுவாமிகளுக்கு முறைப்படி பெண் அழைப்பு, சீர்வரிசை, பூ, பழங்கள், இனிப்புகள், ஊர்வலமாக எடுத்து சென்று மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, பஜனை பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. பக்தர்கள் மொய்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர்.