/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : டிச 07, 2024 07:14 AM

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் 8ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது.
மதியம் யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து விநாயகர்,வள்ளி தேவ சேனா சுப்பரமணியர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சமேத ராஜராஜேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.