ADDED : அக் 28, 2025 06:00 AM

நெய்வேலி: நெய்வேலியில் பா.ஜ., பிரமுகர் வீர வன்னிய ராஜா இல்ல திருமண விழாவில் பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர வன்னிய ராஜாவின் சகோதரர் சீனிவாசன் - சுசீலா தம்பதியரின் மகன் பிரபாகரனுக்கும் ஆண்டிமடம் விளந்தை பகுதியை சேர்ந்த முருகேசன் - ஜெயந்தி தம்பதியின் மகள் காயத்ரிக்கும் நெய்வேலி என்.எல்.சி., மண்டபத்தில் திருமணம் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவில், என்.எல்.சி., சுரங்க பொதுமேலாளர் சுரேஷ் மூர்த்தி, பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், செல்வ மகேஷ், மாநில நிர்வாகிகள் மருத்துவர் தமிழரசி, சிலம்புச்செல்வி, முத்து வைத்திலிங்கம், தாமரைக்கண்ணன், சக்கரவர்த்தி, பா.ஜ., மாநில நிர்வாகிகள் செந்தாமரை கண்ணன், தொகுதி பொறுப்பாளர் தங்கவேல், மாவட்ட பொது செயலாளர் கார்த்தி, துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் மதியழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ்குமார், குறிஞ்சிப்பாடி முன்னாள் ஒன்றிய சேர்மன் அறிவழகன், பா.தொ.ச., தலைவர் குமாரசாமி, பொது செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஆறுமுகம், அலுவல செயலாளர் முருகவேல் கலந்து கொண்டனர்.
நெய்வேலி நகர செயலாளார் சார்லஸ், நகர தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், முன்னாள் கவுன்சிலர் காமராஜ், ஓ.பி.சி., பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திருமலைராஜன், மாநில இணைச்செயலாளர் அரங்க பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் வீர வன்னிய ராஜா, பா.ம.க., மாவட்ட மகளிர் அணி தலைவி சுசிலா சீனிவாசன், தேசபக்த இயக்க தலைவர் வீராசாமி குடும்பத்தினர் வரவேற்றனர்.

