/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாரச்சந்தை குத்தகை ஏலம் இந்தாண்டு ரூ.4 லட்சம் கூடுதல்
/
வாரச்சந்தை குத்தகை ஏலம் இந்தாண்டு ரூ.4 லட்சம் கூடுதல்
வாரச்சந்தை குத்தகை ஏலம் இந்தாண்டு ரூ.4 லட்சம் கூடுதல்
வாரச்சந்தை குத்தகை ஏலம் இந்தாண்டு ரூ.4 லட்சம் கூடுதல்
ADDED : மே 24, 2025 11:47 PM
நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் வாரச்சந்தை குத்தகை ஏலம் கடந்த ஆண்டைவிட ரூ. 4 லட்சம் கூடுதலாக போனது.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுப்ர மணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் கடலுார் - பண்ருட்டி சாலையை ஒட்டி காராமணிக் குப்பத்திலேயே உள்ளது.
இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடப்பது வழக்கம். சந்தையில் கடை வைக்கும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு குத்தகைக்கு விடுவது வழக்கம். இந்த குத்தகை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை ஒரு ஆண்டுக்கு நடைமுறையில் இருக்கும்.
கடந்த ஆண்டு குத்தகை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு போனது. இதன் காலம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. வரும் ஆண்டுக்கான குத்தகை ஏலம் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் தேவகி முன்னிலையில் நடந்தது.
போட்டி அதிகமாக இருந்ததால் தற்போது ஏலம் எடுத்து நடத்தி வரும் காராமணிக்குப்பத்தை சேர்ந்த சவுமியா 11 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். இது கடந்த ஆண்டு ஏல தொகையை விட 4 லட்சம் ரூபாய் கூடுதலாகும்.