/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
/
கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 03, 2025 11:15 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் இ.கே.சுரேஷ் கல்வி குழுமம், சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இ.கே. சுரேஷ் அலைடு அண்டு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது.
கல்விக் குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கல்விக் குழுமத்தின் செயலாளர் இந்துமதி சுரேஷ், முதன்மை நிர்வாக அதிகாரி அருண்குமார், டீன் கவி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சின்னப்பொண்ணு வரவேற்றார். கொளஞ்சிப்பர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ஹெலன் ரூத் ஜாய்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதலாமாண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
அலைடு அண்டு ஹெல்த் சயின்ஸ் முதல்வர் ஞானசுந்தரி, கல்வியியல் கல்லுாரி துணை முதல்வர் செல்வராசு வாழ்த்திப் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.