ADDED : ஜூன் 22, 2025 02:08 AM

அ நிறம் | அளவு
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கோபி தலைமை தாங்கினார். 4-தமிழ்நாடு என்.சி.சி., கட்டுப்பாட்டு அலுவலர் கர்னல் வாசுதேவன், ஜூனியர் கமிஷன் ஆபிசர் பிஜூ ஜோசப் பங்கேற்று, என்.சி.சி., முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, தேசிய மாணவர் படை குறித்தும், ஒற்றுமை, ஒழுக்கம், தலைமை பண்பு ஆகியவை குறித்தும் பேசினர்.
பள்ளி என்.சி.சி., அலுவலர் ராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
