/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
/
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : மார் 21, 2025 06:58 AM

கடலுார் : கடலுார் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவனம் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கடலுார் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர்., நிதியுதவி மூலம் செம்மங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சங்கொலிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன துணைத்தலைவர் ஒளிச்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று 4லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோபிநாதன், பாமா சுமதி, நிறுவன அதிகாரிகள் முரளி, பிரதீப், விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.