/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
/
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : நவ 28, 2025 05:01 AM

விருத்தாசலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், விருத்தாசலம் ரிஷப் ஜெயின் சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலர் வேல்முருகன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட விவசாய அணி தலைவர் வெங்கடாஜலபதி, இளைஞரணி செயலாளர் நடராஜன், இளைஞரணி துணை செயலாளர் பாலு, கிளை செயலாளர் விஜயன், மணிகண்டன், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அதேபோல், புலியூர், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

