/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் பண்டிகையையொட்டி பூவிழந்தநல்லுாரில் நலத்திட்ட உதவி
/
பொங்கல் பண்டிகையையொட்டி பூவிழந்தநல்லுாரில் நலத்திட்ட உதவி
பொங்கல் பண்டிகையையொட்டி பூவிழந்தநல்லுாரில் நலத்திட்ட உதவி
பொங்கல் பண்டிகையையொட்டி பூவிழந்தநல்லுாரில் நலத்திட்ட உதவி
ADDED : ஜன 20, 2024 06:17 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழந்தநல்லுார் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் வெங்கடேசன் பிள்ளை பங்கேற்று ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள பூவிழந்தநல்லூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு கிராமத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரிபுரசுந்தரி பத்மநாபன், ஆசிரியர் ஞானம் முன்னிலை வகித்தனர்.
ராதா இன்ஜினியரிங் நிறுவனர் வெங்கடேசன், ஞானாம்பிகை வெங்கடேசன் பங்கேற்று, பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.