/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலத்திட்ட உதவி : அமைச்சர் வழங்கல்
/
நலத்திட்ட உதவி : அமைச்சர் வழங்கல்
ADDED : அக் 04, 2025 07:28 AM

ராமநத்தம் : ராமநத்தம் பகுதியில் நடந்த மக்கள் குறைகேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் உதயகுமார், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கி, குறைகளைக் கேட்டறிந்தார்.
மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், ஆவட்டி குடிகாடு, மேல் ஆதனுார், கீழ் ஆதனுார் உள்ளிட்ட கிராமங்களில் மக்களின் குறை கேட்புக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடந்தது.