/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1,000 பேருக்கு நலத்திட்டம்: அ.தி.மு.க., வழங்கல்
/
1,000 பேருக்கு நலத்திட்டம்: அ.தி.மு.க., வழங்கல்
ADDED : மே 20, 2025 06:51 AM

கடலுார்: கடலுாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சம்பத் தலைமை தாங்கி, சாலையோர நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 1000 பேருக்கு நிழற்குடை, விளையாட்டு உபகரணங்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் மாதவன், மாவட்ட அவைத் தலைவர் குமார், மீனவர் பிரிவு தங்கமணி, பக்கிரி, மாவட்ட பேரவை கனகராஜ், ஒன்றிய செயலாளர் அழகானந்தம், மாவட்ட மீனவர் பிரிவு குப்புராஜ், வர்த்தகப் பிரிவு வரதன், சந்திரகாசன், மகளிர் அணி சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.