/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் நீர்தேக்கம் இன்று திறப்பு; மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

ADDED : டிச 14, 2024 05:54 AM

சிறுபாக்கம் : திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
திட்டக்குடியில் 29 அடி வெலிங்டன் நீர்தேக்கம் உள்ளது. தொடர் மழையாலும், தொழுதுார் அணைக்கட்டு மூலமாகவும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால், நீர்த்தேக்கத்தில் 26.10 அடி நீர் தேங்கியுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர்த்தேக்கத்தை இன்று காலை 8:00 மணியளவில் திறக்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் வெலிங்டன் நீர்தேக்கத்தை திறந்து வைக்கிறார். இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அமைச்சர் கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.