/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாட்ஸ் ஆப் குழு இணைப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
வாட்ஸ் ஆப் குழு இணைப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாட்ஸ் ஆப் குழு இணைப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாட்ஸ் ஆப் குழு இணைப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மே 02, 2025 05:26 AM

சிதம்பரம்,: சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் கட்சியினர் மற்றும் பொதுமக்களை வாட்ஸ் ஆப் குழுவில் இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், பொருளாளர் சுந்தர், இணை செயலாளர் ரங்கம்மாள் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர், பாண்டியன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வம், தேன்மொழி, திருமாறன், சண்முகம், தில்லை கோபி, மீர்ஹமீது, ரங்கசாமி, சுரேஷ்பாபு, கர்ணா, தமிழரசன், வசந்தகுமார், வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர செயலாளர் மணிராஜ் நன்றி கூறினார்.