/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழக அரசு வழங்கிய கரும்புக்கான ஊக்கத்தொகை தனியார் ஆலை வழங்குவது எப்போது?
/
தமிழக அரசு வழங்கிய கரும்புக்கான ஊக்கத்தொகை தனியார் ஆலை வழங்குவது எப்போது?
தமிழக அரசு வழங்கிய கரும்புக்கான ஊக்கத்தொகை தனியார் ஆலை வழங்குவது எப்போது?
தமிழக அரசு வழங்கிய கரும்புக்கான ஊக்கத்தொகை தனியார் ஆலை வழங்குவது எப்போது?
ADDED : ஜன 08, 2024 05:47 AM
நெல்லிக்குப்பம்: தமிழக அரசு கூட்டுறவு கரும்பு ஆலைகளுக்கு அறிவித்த ஊக்கத் தொகையை, தனியார் ஆலை விவசாயிகள் பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கான விலையை அறிவிக்கும்.இது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொறுந்தும்.மாநில அரசுகள் சூழ்நிலைக்கேற்ப கூடுதல் விலையை அறிவிக்கும்.அதை தனியார் ஆலைகள் வழங்கி வந்தன.
ஆனால் 2013ஆம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு கூடுதல் விலை அறிவிக்க அதிகாரமில்லையென கூறி ,தனியார் ஆலைகள் மத்திய அரசு விலையை மட்டுமே வழங்கி வருகின்றனர்.
2021-22 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 2,950 ஆதார விலையை அறிவித்தது. தனியார் ஆலைகள் பிழிதிறன் அடிப்படையில் டன்னுக்கு ரூ. 2,755 மட்டுமே வழங்கினர்.
மத்திய அரசு விலையை உறுதி செய்யும் வகையில் ஊக்க தொகையாக டன்னுக்கு ரூ.195 தமிழக அரசு வழங்கியது.கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2022-23 கரும்பு ஆண்டில் மத்திய அரசு ரூ. 3,050 அறிவித்தது.
ஆனால் தனியார் ஆலைகள் ரூ. 2,821 மட்டுமே வழங்கினர். அதனால் தமிழக அரசு ஊக்க தொகை வழங்க ரூ. 240 கோடி ஒதுக்கியது. டன்னுக்கு ரூ. 195 கூட்டுறவு ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஊக்கத் தொகை தனியார் ஆலை விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.பொங்கல் பண்டிகைக்குள்ளாவது தனியார் ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.
மேலும் மத்திய அரசு விலையை உறுதி செய்யும் வகையில் கூடுதலாக டன்னுக்கு ரூ. 34 வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.