ADDED : ஆக 18, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; கீரப்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நுாலகம் திறக்கப்படாமல் உள்ளது.
கீரப்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் நுாலகம் இயங்கி வந்தது. ஏராளமான வாசகர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கட்டடம் பழுது ஏற்பட்டதால் அலுவலகம் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிளை நுாலகத்திற்கு தனியாக கட்டடம் கட்டும் பணி 2023- 24 நிதியாண்டில் ரூ. 22 லட்சம் மதிப்பில் நடந்தது.
கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் நுாலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அரசின் நிதி வீணாகிறது. இதனால், வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள் ளது.
எனவே, நுாலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.