/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?;பல ஆண்டுகளாக விடிவு பிறக்காததால் மக்கள் அதிருப்தி
/
காட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?;பல ஆண்டுகளாக விடிவு பிறக்காததால் மக்கள் அதிருப்தி
காட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?;பல ஆண்டுகளாக விடிவு பிறக்காததால் மக்கள் அதிருப்தி
காட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?;பல ஆண்டுகளாக விடிவு பிறக்காததால் மக்கள் அதிருப்தி
ADDED : டிச 19, 2025 06:04 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் பிரதான சாலைகளில் காட்சி பொருளாக உள்ள தானியங்கி சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.
விருத்தாசலம் உட்கோட்ட தலைமையிடமாக உள்ளதால், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, வேப்பூர், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், மந்தாரக்குப்பம், திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
அதுபோல், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பஸ், லாரி, வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக செல்வதால் நகரில் போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை சேலம் புறவழிச்சாலை, குப்பநத்தம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை வரையில் என இருபுறம் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமமடைகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பாலக்கரை, ஜங்ஷன்ரோடு, கடைவீதி நான்குமுனை சந்திப்பு, கடலுார் ரோடு பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், வாகனங்களை எச்சரித்து நிறுத்தும் எலக்ட்ரானிக் கடிகாரம் பொருத்தாமல், அப்போது 'பிளிங்கர்ஸ்' மட்டுமே பயன்பட்டன.
இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வது தொடர்ந்தது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் முயற்சியால் கடந்த அக்டோபர் மாதம்
பாலக்கரை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், கடைவீதி நான்குமுனை சந்திப்பு, ஜங்ஷன்ரோடு, எல்.ஐ.சி., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தபால் நிலையம் போன்ற வாகன நெரிசல் ஏற்படும் பிரதான இடங்களில் புதிதாக சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன. அந்த கம்பங்கள், ஓரிரு நாட்களுக்கு மட்டுமே, பயன்பாட்டில் இருந்தன. ஆனால், அதற்கு பிறகு, காட்சி பொருளாக மாறி போன து.
அதில், பாலக்கரை, கடைவீதி பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் 'எலக்ட்ரானிக் கடிகாரமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் தற்போது முறையாக இயங்கவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகரில் வாகன நெரிசலுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு விடிவுகாலம் பிறக்கும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது.
இந்த போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

