/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்றில் கரை சீரமைப்பது ... எப்போது; கடலுாரில் மீண்டும் வெள்ளம் புகும் அபாயம்
/
பெண்ணையாற்றில் கரை சீரமைப்பது ... எப்போது; கடலுாரில் மீண்டும் வெள்ளம் புகும் அபாயம்
பெண்ணையாற்றில் கரை சீரமைப்பது ... எப்போது; கடலுாரில் மீண்டும் வெள்ளம் புகும் அபாயம்
பெண்ணையாற்றில் கரை சீரமைப்பது ... எப்போது; கடலுாரில் மீண்டும் வெள்ளம் புகும் அபாயம்
ADDED : செப் 09, 2025 06:25 AM

கடலுார் : கடந்த ஆண்டு கடலுார் பெண்ணையாற்றில் வெள்ளத்தால் உடைந்த கரையை தமிழக அரசு இதுவரை சீரமைக்கவில்லை. ஆனால் புதுச்சேரி அரசு தீவிரமாக செய்து வருகிறது.
வெள்ள காலங்களில் கடலுார் மாவட்டத்திற்குள் பாயும் பெண்ணையாற்று கரைகள் உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கடலுார், பெண்ணையாற்றின் வடக்கு கரை பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை 5.75 கோடி ரூபாய் மதிப்பில் கரை பலப்படுத்தும் பணி நடந்து முடிந்தது.
கடந்த கால வெள்ளத்தின்போது, கடலோரப்பகுதியில் உள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா, சுப உப்பலவாடி, தியாகுநகர், சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இதில் நாணமேடு அருகே 200 மீட்டர் நீளத்திற்கும், பெரிய கங்கணாங்குப்பத்தில் 150 மீட்டர் நீளத்திற்கும் மொத்தம் 350 மீட்டர் நீளம் கரைகள் உடைப்பு ஏற்பட்டது. வெறும் மணல் மூட்டைகளை போட்டு அப்போதைக்கு தற்காலிகமாக கரையமைத்தனர்.
அதைத் தொடர்ந்து தண்ணீர் வடிய தொடங்கியதும் நிலைமை சீரானது. ஆனால் உடைந்த கரைகளை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இன்னும் பணிகள் நடைமுறைக்கு வரவில்லை.
கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலத்தின் எதிர் கரையும் வெள்ளத்தின்போது பழுதானது. அவை வெள்ள நீர் வடிந்த கையோடு சீரமைக்கும் பணி புதுச்சேரி மாநிலம் சார்பில் நடந்து வருகிறது.
தரைப்பாலம், கொம்மன்தான்மேடு கரை ஆகியவை சீரமைக்க 10.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது.
இந்த தொகையில் தரைப்பாலத்தில் இருந்து 300 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் சீரமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.
ஆனால் தமிழக அரசு சார்பில் பெண்னணயாற்றில் வெவ்வேறு இடங்களில் உள்ள 4 பணிகள் ஒருங்கிணைத்து மேற்கொள்ள 92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் அந்த பணி துவங்கப்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் மழைக்காலத்திற்குள் பணிகள் துவங்கி முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பொதுவாக மழைகாலம் துவங்குவதற்கு முன்பே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் சாத்தனுார் அணை நிரம்பியதும் திறந்து விடுவது வழக்கம்.
அவ்வாறு தண்ணீர் திறந்துவிட்டால் பெண்ணையாற்றில் வரக்கூடிய தண்ணீர் மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்து சேதத்தை உருவாக்கும்.
எனவே, வெள்ளம் வருவதற்குள் போர்க்கால அடிப்படையில் உடைந்த கரையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.