/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்குவது எப்போது?
/
மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்குவது எப்போது?
ADDED : டிச 08, 2025 05:54 AM
வேப்பூர்: மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்க கோரிக்கை எழுந்துள்ளது.
வேப்பூர் அடுத்த மேமாத்துார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, மணிமுக்தாறு செல்வதால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தனி தீவாக கிராமம் மாறுகிறது.
அப்போது, மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும், கிராம மக்கள் தங்களின் சொந்த தேவைக்காகவும், ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் நிலை உள்ளது.
இதனால், மேமாத்துாரில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சட்டசபை கூட்டத்தில், மேமாத்துாரில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்களுக்கு மேலாகியும் கட்டுமானப்பணி துவங்கப்படவில்லை.
தற்போது பெய்த மழையில் மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் செல்வதால் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து நல்லுார் ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மேமாத்துாரில், மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட, ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான, 'டெண்டர்' கடந்த மாதம் விடப்பட்டது. கட்டுமானப் பணி துவங்குவதற்குள், மழை பெய்து ஆற்றில் தண்ணீர் செல்வதால் கட்டுமானப்பணி துவங்கவில்லை. ஆற்றில் தண்ணீர் வடிந்ததும் விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.

