/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி மாவட்டம் அறிவிப்பு எப்போது: சவுமியா கேள்வி
/
தனி மாவட்டம் அறிவிப்பு எப்போது: சவுமியா கேள்வி
ADDED : டிச 30, 2025 04:01 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பேன் என கூறிய முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்போது என சவுமியா அன்புமணி பேசினார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் பா.ம.க., மகளிரணி நடந்த மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டத்தில், பசுமை தாயகம் தலைவர் சவுமியா பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, விருத்தாசலம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்போம் என்றார். ஆட்சியே முடிய போகிறது. ஆனால் இதுவரை தனி மாவட்ட கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் மது பழக்கம் அதிகரித்துள்ளதால், இளம் விதவைகள் அதிகமாகி வருகின்றனர். தற்போது, பள்ளி, கல்லுாரி மற்றும் வழிபாட்டு தளங்களிலும் போதை பழக்கம் அதிகமாகி உள்ளது. பா.ம.க., ஆட்சியில் இல்லாத போதே மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த மதுக்கடைகளை மூடியது.
இவ்வாறு அவர் பேசினார்.

