/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு எப்போது சாலையோரம் தீயிட்டு கொளுத்தும் அவலம்
/
கடலுாரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு எப்போது சாலையோரம் தீயிட்டு கொளுத்தும் அவலம்
கடலுாரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு எப்போது சாலையோரம் தீயிட்டு கொளுத்தும் அவலம்
கடலுாரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு எப்போது சாலையோரம் தீயிட்டு கொளுத்தும் அவலம்
ADDED : ஜன 10, 2024 12:14 AM

கடலுார் நகரம் சமீபத்தில் மாநகரட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படாமல், நகராட்சி அந்தஸ்திலேயே உள்ளது. குறிப்பாக, குப்பைகளை கொட்டுவதற்கு கூட இடமின்றி சாலையோரம் கொட்டி எரிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
மாநகராட்சியில் ஏராளமான நகர் பகுதிகள் உருவாகி உள்ளது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 1.75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தின் தலைமை இடமாக உள்ள இங்கு மாவட்ட அரசு அலுவலகங்கள், 2,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இங்கு, குப்பைகள் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்தம் முறையில் பணியை விட்டுள்ளது. அந்த பணி ஆட்கள் வேலை செய்கிறார்காள என்பது நகர மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மாநகராட்சியில் இயங்கி வந்த இரண்டு குப்பை கிடங்குகள் செயல்படவில்லை. இதனால், மாநகரில் சேகரிக்கும் குப்பைகள் நகரின் ஒதுக்கு புறங்களிலும், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளிலும் கொட்டப்படுகிறது.
நகரில் பல பகுதிகளில் குப்பைகள் நாள் கணக்கில் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனை ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தீயிட்டு கொளுத்துகின்றனர்.
இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக மாறி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சாலையோரம் குப்பைகள் தீயிட்டு கொளுத்துவதின் மூலம் நச்சுத் தன்மை கொண்ட புகைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து பொதுமக்கள் கலெக்டர், கமிஷனர் என அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
மாநகராட்சிக்கு குப்பை கொட்ட அடுத்தடுத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டும், பொதுமக்கள் எதிர்ப்பால் இதுவரையில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது. எனவே, கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்து, கடலுார் மாநகராட்சி குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

