/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி... பாதுகாக்க யாருமில்லையே வாட்ஸ் ஆப்பில் குமுறும் போலீசார்

ADDED : ஜூலை 02, 2025 07:24 AM
குற்றவாளிகளை பிடிக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். பிரச்னை என்றால் நமக்காக யாரும் வருவதில்லை என வாட்ஸ் ஆப்பில் போலீசார் புலம்பி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, அவர்களது குடும்பத்தினர் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் கவனமாக இருக்குமாறு போலீசார் பலரும் வாட்ஸ் ஆப்பில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதில், குற்றவாளிகளை பிடிக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். நமக்கும் எந்த ஒரு குற்றவாளிகளுக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால், நம் மீது கொலை வழக்கு பதிவாகிறது.
எனவே, குற்றவாளிகளை பிடிக்கும்போது அவர்களின் உடல்நிலை, மன நிலை எப்படி உள்ளது என்பதை அறிவுப்பூர்வமாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்யவே வேலை செய்கிறோம்.
ஆனால், சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, நம்மை பாதுகாக்க யாரும் இல்லை. குரல்கொடுக்க எவரும் வருவதுமில்லை.
படுபாதக கொலைகளை செய்யும் ரவுடிகள் உடனே ஜாமினில் வெளியே வந்து விடுகிறார்கள். ஆனால், போலீசாருக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது. இதை மனதில் வைத்து மிகவும் கவனமாக செயல்படுங்கள். நமக்கும் மனைவி, குழந்தைகள் என குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என வாசகங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.