/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லோக்சபா தேர்தலில் ஓட்டு குறைந்தது ஏன்? நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி
/
லோக்சபா தேர்தலில் ஓட்டு குறைந்தது ஏன்? நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி
லோக்சபா தேர்தலில் ஓட்டு குறைந்தது ஏன்? நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி
லோக்சபா தேர்தலில் ஓட்டு குறைந்தது ஏன்? நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கேள்வி
ADDED : ஜன 28, 2025 06:25 AM
திண்டிவனம் : விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 90 பேர் மட்டும் மொபைல் போன் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் முதல்வருக்கு சால்வை மற்றும் வேட்டி மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. பூங்கொத்து கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டம் இரவு 7.15 மணிக்கு துவங்கி, 8.15 மணிவரை நடந்தது. மேடையில் முதல்வருடன், பொதுச் செயலாளர் துரைமுருகன் மட்டும் அமர்ந்திருந்தார். மேடைக்கு அருகில் அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட பொறுப்பாளர்கள் சேகர், கவுதமசிகாமணி அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் குறித்தும், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகள் குறித்து பேசினர்.
அப்போது, லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் குறைந்த ஒன்றியங்களின், ஒன்றிய செயலாளர்கள் பெயரை குறிப்பிட்டு, ஏன் ஓட்டுகள் குறைந்தது என கேள்வி எழுப்பினார்.
மேலும், குறைகளை சரி செய்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே கட்சி தலைமை அனுப்பியிருந்த கடிதத்தில் கூறியபடி, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் நேரடியாக கருத்துக்களை கேட்கப்படவில்லை. கட்சி பணிகள், ஆக்கபூர்வமாகன கருத்துக்கள், ஆலோசனைகள், புகார்கள் ஆகியவற்றை நிர்வாகிகள் சிலர் முதல்வரிடம் நேரடியாக வழங்கினார்.
இவ்வாறு பெறப்பட்ட கடிதங்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, தானே கடிதம் வாயிலாக நிர்வாகிகளுக்கு தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.