/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடத்தால் அடித்து கணவர் கொலை விருத்தாசலம் அருகே மனைவி கைது
/
குடத்தால் அடித்து கணவர் கொலை விருத்தாசலம் அருகே மனைவி கைது
குடத்தால் அடித்து கணவர் கொலை விருத்தாசலம் அருகே மனைவி கைது
குடத்தால் அடித்து கணவர் கொலை விருத்தாசலம் அருகே மனைவி கைது
ADDED : அக் 03, 2025 05:45 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை சில்வர் குடத்தால் அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 36; மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி, 30; திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
வேல்முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி சுவாமிக்கு பூஜை செய்ய, வேல்முருகனிடம், வள்ளி 500 ரூபாய் கொடுத்து பூ வாங்கி வருமாறு கூறினார். பூ வாங்கியது போக மீதி பணத்தை வள்ளியிடம் கொடுக்காமல், வேல்முருகன் மது வாங்கி குடித்தார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வள்ளி, கையில் வைத்திருந்த சில்வர் குடத்தால், வேல்முருகன் தலையில் தாக்கினார். இதில், வேல்முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
தகவலறிந்து ஆலடி போலீசார், உடலை கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிந்து, வள்ளியை கைது செய்தார்.