/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2 குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
2 குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : ஜூலை 17, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 36. அவரது மனைவி சிவசங்கரி, 36. தம்பதியருக்கு யுவன், 2, அபினேஷ், 1, என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஆறுமுகம் வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது மனைவி சிவசங்கரி, 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவர்களை பற்றி தகவல் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.