/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : மே 20, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : குழந்தையுடன் மனைவி மாயமானதாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வானுார் அடுத்த பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்,29; இவரது மனைவி அனிதா, 25; இவரகளுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பண்ருட்டி அடுத்த அரிசிகவுண்டன்பாளையம் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி ராஜகோபால் புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார்.
கடந்த 11ம் தேதி அனிதா, குழந்தையுடன் மயிலும் கோவிலுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ராஜகோபால் நேற்று அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.