ADDED : ஆக 30, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
வடலூர், ஆக.31-
மனைவி மாயமானதாக கணவர் போலீசில் புகார் அளித்தார்
குறிஞ்சிப்பாடி, கீழூர் அடுத்த பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் மனைவி சுகந்திதேவி, 34. கடந்த 27ம் தேதி, கதிரேசன் கோயம்புத்தூர் வேலைக்கு சென்றார். அடுத்த நாள் காலை அவர் வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த சுகந்தி தேவி மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து தனது மனைவி மாயமானது குறித்து கதிரேசன் கொடுத்துள்ள புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
