தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படுமா?சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை

வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படுமா?சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை

வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படுமா?சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை


UPDATED : ஆக 30, 2026 06:21 PM

ADDED : ஆக 30, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 06:21 PM ADDED : ஆக 30, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இருந்து கடல்நீர் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட தற்போது ரூ.194 கோடி திட்ட மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளதால், சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் இத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என 30 கிராம பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், கூடலையாத்துாரில் துவங்கி, சேத்தியாத்தோப்பு வழியாகவெள்ளாறு பரங்கிப்பேட்டை கடலில் வந்து கலக்கிறது. புவனகிரி மற்றும் வெள்ளாற்று கரையோரம் பொதுமக்கள் நல்ல குடிநீரை குடித்து வந்தனர். விவசாயம்செய்யவும் பல ஆண்டாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில், பரங்கிப்பேட்டை கடலில் இருந்து உவர்ப்பு நீர் வெள்ளாற்றுக்குள் புகுந்ததால், தற்போது பல கிராமங்களில் குடிநீர், உவர்ப்பு நீராக மாறியது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சில கிராமங்களில் பாதிப்பு இருந்த நிலையில், தற்போதுபரங்கிப்பேட்டையில் இருந்து, துவங்கி, ஆதிவராகநல்லுார், தம்பிக்குநல்லான்பட்டிணம், கீழ் புவனகிரி, புவனகிரி, பெருமாத்துார், வண்டுராயன்பட்டு, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு உட்பட 30க்கும் மேற்பட்டகிராமங்களில் பரங்கிப்பேட்டை கடலில் இருந்து வெள்ளாற்று வழியாக உவர்ப்பு நீர்உள்ளே புகுந்தது.மேலும், விவசாய நிலங்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளாற்று நீரில் கடல் நீர்உட்புகுந்ததால் கடந்த 20 ஆண்டுகளாக, 30 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

குடிப்பதற்கு மினரல் வாட்டரும், முப்போகம் செய்து வந்த விவசாயிகள் ஒருபோகம் மட்டும் விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், அப்பகுதி மக்கள்பல பொதுநல அமைப்புகளுடன் இணைந்து பல போராட்டங்கள் நடத்தியும்,மாவட்ட கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை வைத்தும் பலன் இல்லை.

தேர்தல் நேரத்தில், பிரச்சாரத்திற்கு புவனகிரிக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள்வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டுசெல்வதோடு சரி. ஆனால், அவை அனைத்தும் தற்போது வரை தேர்தல்வாக்குறுதியாக மட்டுமே உள்ளது. வெள்ளாற்றின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, தடுப்பனை அமைக்க தற்போதைய திட்ட மதிப்பீடு ரூ.194 கோடி செலவாகும் என அதிகாரிகள் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி புவனகிரிதொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன், மானிய கோரிக்கையின்போது, தொடர்ந்து சட்டசபையில் பேசி வருகிறார்.பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது நடக்க உள்ளசட்டமன்ற கூட்டத்தொடரில், முதல்வர் விஜய், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புஅணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்க வேண்டும் என அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us