ADDED : செப் 23, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பிரித்தா. இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆட்டோ மொபைல்ஸ் கடையில் பணிபுரிந்த பிரித்தா, கடந்த 21ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. குப்புசாமி புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
