தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மக்காச்சோளம் கொள்முதல்  நிலையம் அமைக்கப்படுமா?

மக்காச்சோளம் கொள்முதல்  நிலையம் அமைக்கப்படுமா?

மக்காச்சோளம் கொள்முதல்  நிலையம் அமைக்கப்படுமா?


ADDED : அக் 03, 2024 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் மக்காச் சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுபாக்கம், அதனை சுற்றியுள்ள கிராம விவசாயி கள் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, எள், வரகு பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். நடப்பாண்டில், 20 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

வழக்கமாக மக்காச்சோளத்தை அறுவடை செய்து புரோக்கர்கள் மூலம் வெளி மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் புரோக்கர் கமிஷன் மட்டுமல்லாது வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது இல்லை.

மாறாக கொள்முதல் நிலையம் அமைத்தால் விவசாயிகள் நேரடியாக வந்து விற்பனை செய்ய முடியும். இதனால் புரோக்கர்கள் தலையீடு இல்லாமல் விளைவித்த பயிருக்கு உரிய விலையை விவசாயிகள் பெறுவார்கள்.

எனவே, சிறுபாக்கத்தில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us