/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டப்படுமா?
/
வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டப்படுமா?
வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டப்படுமா?
வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்டப்படுமா?
ADDED : அக் 26, 2025 10:57 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் பேரூராட்சி, கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தத்திலுள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி பெண்ணாடம் கிழக்கு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, கோட்டைக்காடு, பாசிக்குளம், முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, புக்குழி, புதுப்பாளையம், ஆலத்தியூர், தெத்தேரி உட்பட 10 கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
நிழற்குடை பராமரிப்பின்றி சேதமடைந்ததால் திறந்தவெளியை பயன்படுத்தி வெளியூர் சென்று வருகின்றனர். இதனால் மழை, வெயில் காலங்களில் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி, வாள்பட்டறை பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.