/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
/
விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 10, 2025 12:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மணிக்கொல்லையில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையில் சுமார் 1000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு அதிகளவில் சிறுவர்கள்,பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளனர்.
இப்பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் விளையாட முடியாதநிலை உள்ளது. இதனால் அவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இப்பகுதி இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.