/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடியில் போக்குவரத்து காவல் நிலையம்... அமைக்கப்படுமா : விபத்தை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
திட்டக்குடியில் போக்குவரத்து காவல் நிலையம்... அமைக்கப்படுமா : விபத்தை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
திட்டக்குடியில் போக்குவரத்து காவல் நிலையம்... அமைக்கப்படுமா : விபத்தை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
திட்டக்குடியில் போக்குவரத்து காவல் நிலையம்... அமைக்கப்படுமா : விபத்தை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஆக 08, 2025 02:23 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் போக்குவரத்து பாதிப்பு கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் நிலையம் துவங்க வேண்டும்.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி தாலுகாவாகவும், நகராட்சியாகவும் உள்ளது. சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி கோவில், தாலுகா அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, துணி, நகைக்கடைகள் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது.
திட்டக்குடியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு திட்டக்குடி வந்து செல்கின்றனர். இவர்கள் கிராமப் பகுதியில் இருந்து வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு செல்ல பைக்குகளில் வருகின்றனர்.
அவ்வாறு வருவோர் சாலை மற்றும் சாலையோரங்களில் பைக்குளை நிறுத்திவிட்டு விருத்தாசலம், தொழுதுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதன் காரணமாக தாலுகா அலுவலகம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகரித்து கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது நாளுக்குநாள் தொடர்கிறது.
வாகன நெரிசலை கட்டுப்படுத்த திட்டக்குடியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் 1 சப் இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள் நியமித்து போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஓரளவுக்கு போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் குறைந்தது.
ஓரிரு மாதங்கள் மட்டுமே அவர்கள் பணியில் இருந்த நிலையில் எவ்வித அறிவிப்புமின்றி திடீரென போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதனால் திட்டக்குடி நகரில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவது மட்டும் இதுநாள் வரை தொடர்கிறது.
எனவே, போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகளை தடுக்க திட்டக்குடியில் நிரந்தரமாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.