/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் ரயில் முன்பதிவு மையம் அமைக்கப்படுமா?
/
நெய்வேலியில் ரயில் முன்பதிவு மையம் அமைக்கப்படுமா?
ADDED : நவ 04, 2024 05:47 AM
மந்தாரக்குப்பம் : நெய்வேலியில் ரயில் முன்பதிவு மையம் ரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
நெய்வேலி அதை சுற்றியுள்ள பகுதிகளில் என்.எல்.சி., நிறுவனத்தில் ஏராளமனோர் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக வட மாநில மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் பொதுமக்கள் பஸ் போக்குவரத்து மட்டுமின்றி ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சொந்த ஊருக்கு செல்ல ரயில் சேவையை பயன்படுத்த விரும்பும் பயணிகள் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் சென்று முன்பதிவு செய்ய வேண்டும் அல்லது தனியார் கணினி மையங்களுக்கு சென்று கூடுதல் கட்டணம் செலுத்தி புக்கிங் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் கூட்ட நெரிசலால் அவதிப்படுவதுடன் நேர விரயமும் ஏற்படுகிறது.
எனவே பயணிகள் நலன் கருதி ரயில் முன்பதிவு சேவை மையத்தை நெய்வேலி ரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தயில் எழுந்துள்ளது.